Monday, August 13, 2007

தஸ்லிமா தாக்குதல்-கருத்துரிமைக்கு எதிரான சவால்




தஸ்லிமா நஷ்ரீன் ஐதரபாத் நகரில் தாக்கபட்ட சம்பவம் கருத்துரிமைக்கு எதிரான ஒரு மோசமான அராஜகம்.தாக்குதல் பற்றி MIM தலைவர் அக்பரூதின் ஓவைஸி சொன்னது....

"MLA அந்தஸ்து பற்றி நாங்கள் கவலை படவில்லை.முதலில் நாங்கள் முஸ்லிம்கள்.இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்களை எந்த முறை சாத்தியப்படுகிறதோ அந்த முறையில் எதிர்ப்போம்.அது எங்களின் கடமையும்கூட.."

"மேற்கு வங்கத்தில் வேண்டுமானால் அந்தம்மாவை அனுமதித்திருக்கலாம்...இது ஐதராபாத்..இங்கு இந்த பெண்ணை அனுமதிக்க முடியாது. இந்த தாக்குதல் அந்த பெண்மணிக்கு தேவையான ஒன்றுதான்.."

என்னயா இது? ஐதராபாத் இன்னும் இந்தியாவில் இணக்கப்படவில்லையா? இந்திய அரசியல் சாசனம் அங்கு அமுலுக்கு வரவில்லையா? MLA அந்தஸ்து பற்றி கவலை படவில்லையென்றால் இந்திய அரசியல் சாசனம் பற்றியும் கவலை படவில்லை என்றுதானே அர்த்தம்.பதவி ஏற்பு அன்று செய்த உறுதி மொழிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டாரா இந்த ஆள்? அடிப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறதா என்பதை அரசு விளக்கியாக வேண்டும்.அவருக்கு எது முக்கியம் என அவர் முடிவு செய்யட்டும்.சட்டம் தன் முடிவை எடுக்க வேண்டும்

கருத்து சொன்னதற்காக தாக்கப்படுவதை நியாயப்படுத்தும் இந்த மத அடிப்படை வாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடித்து நொறுக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஜனநாயகம்,மக்களாட்சி என்று நாம் பீற்றிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

6 comments:

ராஜ நடராஜன் said...

MLA ஆக இல்லாட்டியும் MIM ஆக இருப்பதற்கு MANஇதனாகவாவது இருக்கலாமே.நல்ல மதவாதி பெண்ணை இழிவு படுத்த மாட்டான்.

G.Ragavan said...

// தாக்குதல் பற்றி MIM தலைவர் அக்பரூதின் ஓவைஸி சொன்னது....

"MLA அந்தஸ்து பற்றி நாங்கள் கவலை படவில்லை.முதலில் நாங்கள் முஸ்லிம்கள்.இஸ்லாத்திற்கு எதிராக பேசுபவர்களை எந்த முறை சாத்தியப்படுகிறதோ அந்த முறையில் எதிர்ப்போம்.அது எங்களின் கடமையும்கூட.."

"மேற்கு வங்கத்தில் வேண்டுமானால் அந்தம்மாவை அனுமதித்திருக்கலாம்...இது ஐதராபாத்..இங்கு இந்த பெண்ணை அனுமதிக்க முடியாது. இந்த தாக்குதல் அந்த பெண்மணிக்கு தேவையான ஒன்றுதான்.." //

மகா மட்டமான பேச்சு. கேவலம். எதிர்கருத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாத கோழையினைப் போல உளறியிருக்கிறார் அக்பரூதின்.

சாலிசம்பர் said...

இந்த அராஜகப் பேர்வழிகளை மத்திய அரசே நேரடியாகத் தலையிட்டு டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் மத்திய அரசு என்று சொல்லிக்கொள்வதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது?

ச.மனோகர் said...

அராஜகத்திற்கு எதிராக குரல் எழுப்பிய நட்டு,ஜி.ராகவன் மற்றும் ஜாலிஜம்பர் ஆகியோருக்கு நன்றி!

நல்லடியார் said...

அடைக்கலம் தந்த நாட்டில், மற்றவர்களின் உணர்வுகளைத் தாக்கி எழுதுவது நியாயம் என்றால், அவரால் பாதிக்கப்பட்டவர்களால் அவர் தாக்கப்பட்டதும் நியாயமே!

இந்து மதத்திற்கு எதிராக எவராவது கருத்துச் சொன்னால் Insulting Religious Sentiments என்று சொல்லப்படும்போது, அதே காரணம் இஸ்லாத்தைப் பற்றித் தரக்குறைவாகச் சொல்லப்படும்போது பொருந்தாமல் போய்விடாது!

உயிருக்குப் பாதுகாப்பு வேண்டித் தஞ்சம் புகுந்த இடத்திலும், தஸ்லீமாவால் நம்நாட்டின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் உள்ளதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு அவரைத் திருப்பியனுப்புவதே நம் நாட்டுக்கு மட்டுமின்றி, தஸ்லீமாவுக்கே நல்லது!

ச.மனோகர் said...

'அடைக்கலம் தந்த நாட்டில், மற்றவர்களின் உணர்வுகளைத் தாக்கி எழுதுவது நியாயம் என்றால், அவரால் பாதிக்கப்பட்டவர்களால் அவர் தாக்கப்பட்டதும் நியாயமே!..'

அதென்னங்க அடைக்கலம் தந்த நாடு...சொந்த நாடு என்று...இது ஒரு கருத்துங்க...இந்த பூமியில் எங்க வேண்டுமானாலும் சொல்லலாம். கருத்தை கருத்தால் அடி..அதென்ன கையால் அடிப்பது? ஒவைஸியின் பேச்சு எனக்கு பிடிக்கவில்லை.. இப்போது நான் அவரை கன்னத்தில் அறையலாமா? எல்லோரையும் அப்படி அனுமதித்து விட்டால் இந்த சமூகம் மிருகங்கள் வாழுகின்றன சமுகமாக ஆகிவிடும்.

'இந்து மதத்திற்கு எதிராக எவராவது கருத்துச் சொன்னால் Insulting Religious Sentiments என்று சொல்லப்படும்போது, அதே காரணம் இஸ்லாத்தைப் பற்றித் தரக்குறைவாகச் சொல்லப்படும்போது பொருந்தாமல் போய்விடாது!'

கருத்து சொல்வதற்கு நூறு சதவீத உரிமை எல்லோருக்கும் இங்கு உண்டு.ஆனால் இங்கு நாம் பேசுவது வன்முறை நடத்தி, அதை ஆதரித்தும் பேசுவது சம்பந்தமாக.நான் சொல்வது எல்லா மத அராஜகத்திற்கும் சேர்த்துதான்.இந்து அல்ல வேறு மத தீவிர வாதத்திற்கு எதிராக குரல் கொடுப்பதில் எனக்கு எள் அளவும் ஆட்சேபணை இல்லை.

தஸ்லிமாவை எதற்கு திருப்பி அனுப்பவேண்டும்? இது ஒரு ஜனநாயக நாடு.. மக்கள் ஆட்சி நடகிறது. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு நடக்கிறது.அந்த அரசுதான் முடிவு செய்யவேண்டும். அவசரமென்றால் MIM தேர்தலில் வென்று, மத்தியில் ஆட்சியை பிடித்து தஸ்லிமாவை வெளியேற்றலாம்.