Saturday, August 18, 2007

சென்னை ட்ராபிக்-விழி பிதுங்குகிறது...

நேற்று மைலாப்பூரில் இருந்து என் இரு சக்கர வாகனத்தில் அண்ணா நகர் வருவதற்கு ஒரு மணி நேரம் ஆனது. இத்தனைக்கும் நேற்று வார விடுமுறை தினம்..அதுவும் நான் பயணித்த நேரம் பிற்பகல் இரண்டு மணி. எங்கு பார்த்தாலும் வாகனங்கள்..வாகன நெரிசல்கள்.. ஒரு சந்து பொந்து விடாமல். சின்ன சந்துகளிலும் சென்னை நகர போக்கு வரத்து காவற்துரையினரின் தடுப்பு ஏற்பாடுகள். தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு சாலையில் இறக்கி விடப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அதற்கேற்றவாறு சாலை உள் கட்டமைப்பு ஏற்ப்படுத்துவதே இல்லை.அரசு தினந்தோறும் போக்குவரத்து சம்பந்தமாக பல அறிவிப்புகளை,திட்டங்களை கூறி வருகிறது. சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் இன்னும் சில வருடங்களில் சென்னை நகரம் கடும் போக்குவரத்து சிக்கலில் மாட்டுவது உறுதி. உங்கள் வாகனத்தை உங்கள் வீட்டிலிருந்து வெளியே எடுப்பது கூட பிச்சனையாகிவிடும்.

அரசாங்கமும்,நாமும் என்னதான் செய்யப் போகிறோம்?(படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை)

8 comments:

delphine said...

என்ன செய்யபோகிறோம்?

Anonymous said...

Govt should ban all kind of private transport..people should travel only by public transport like bus,train...

வடுவூர் குமார் said...

இங்கு இதை வேறு முறையில் அனுகுகிறார்கள்.
வண்டி வைத்துக்கொள்ள Certificate of Entitlement என்ற முறையில் வாகனங்கள் சாலைக்கு வருகின்றன.இந்த CE மட்டுமே மோட்டர் சைக்கிளுக்கு 1000 வெள்ளியில் இருந்து கார்களுக்கு 40000 க்கு மேல்.கார் விலை தனி.அதனால் கார் வாங்குபவர்கள் பல முறை யோசித்து செய்வார்கள்.
கார்களின் வயது அதிகபட்சமாக 10 வருடங்கள்.
இதெல்லாம் நம் நாட்டிலும் நடக்கவேண்டும் என்றால்,முதலில் பொது போக்குவரத்து முன்னேற வேண்டும்.

ச.மனோகர் said...

'இதெல்லாம் நம் நாட்டிலும் நடக்கவேண்டும் என்றால்,முதலில் பொது போக்குவரத்து முன்னேற வேண்டும்.'

முதலில் அரசியல்வாதிகளின் லஞ்சப் போக்குவரத்தும் குறையவேண்டும்.

குமார் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

K.R.அதியமான் said...

போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்

பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.

இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.

ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..

http://nellikkani.blogspot.com/

சிவபாலன் said...

Terrible!!

mmmmmmmmmm...........

ச.மனோகர் said...

சிவபாலன்...வருகைக்கு நன்றி.

ச.மனோகர் said...

அதியமான்..

இந்தப் பிரச்சனைக்கு நகரமயமாக்கலும் ஒரு காரணம். மக்கள் வேலை வாய்ப்பைத் தேடி கான்கிரீட் காடுகளுக்கு வருவது இயற்கையான ஒன்று.இதன் காரணமாகவே நகரங்களில் மக்கள் பெருக்கமும்,வாகன நெரிசல்களும் அதிகமாகின்றன.மக்கள் நகரங்களுக்கு வருவதை தவிர்க்க கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை பெருக்குவதும் ஒரு சிறந்த வழியாகும்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.