Tuesday, August 28, 2007

காட்டுமிராண்டித்தனம்..



பீகார் மாநிலத்தின் பகல்பூர் மாவட்டத்தில் ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை திருடி மாட்டிக் கொண்ட ஒருவனை பொதுமக்கள் திரண்டு அடித்து உதைத்தார்கள்.பொது மக்களோடு சேர்ந்து, சட்டப்படி நடக்கவேண்டிய போலீஸும் சேர்ந்து திருடியவனை அடித்து நொறுக்கினார்கள். இதன் உச்சக் கட்டமாக திருடனை போலீசாரே ஒரு மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்து போனார்கள். இது அந்த ஊர் பொதுமக்களின் முன்னிலையிலேயே நடந்திருக்கிறது.திருடனை மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்றது ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என்று தெரிகிறது.

இது சம்பந்தமாக லல்லு பிரசாத் யாதவ் கூறியது:

“பீகாரில் காட்டு தர்பார் நடப்பதற்கு இதுவே சாட்சி.. பீகாரின் சட்டம் ஒழுங்கு நிலமை முதல்வர் நித்திஷ் குமார் கையை விட்டு போய்விட்டது”

பீகார் முதல்வர் நித்திஷ் குமார் கூறியது:

“இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும்…சம்பந்தபட்ட போலிசார் மீது
நடவடிக்கை எடுக்கப்படும்”

இந்த காட்சிகளை NDTV தொலைக்காட்சி,அதிர்ச்சி தரும் காட்சிகள் குழந்தைகள் பார்க்க வேண்டாம் என்ற அறிவிப்போடு ஒளிபரப்பியது. என்னதான் அறிவிப்பு செய்தாலும் அந்த கொடுரமான, காட்டுமிராண்டித்தனமான அந்த காட்சிகள் மனதை மிகவும் பாதித்தது. எனவே இந்த மாதிரி காட்சிகளை தவிர்க்க வேண்டும்.தவிர்க்க முடியாத நேரங்களில் இந்த மாதிரி காட்சிகளை ஒரு சில stills ஆக காட்டினால் போதும். தொலைக்காட்சி நிறுவனங்கள் யோசிக்குமா?

2 comments:

Anonymous said...

terrible!

meganathan.

மு த் து க் கி ரு ஷ் ண ன் said...

இதே போன்று ஒரு நிகழ்வு எனது தெருவிலும் நடந்தது..
பைக் திருட முயன்று மாட்டிய அவனை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்,அப்பொழுது அவன் அலட்சியமாகத்தான் நின்றான்.ஒருவகையில் இது தேவை என்று தான் நினைக்கிறேன். அப்பொழுதுதான் திருட பயப்படுவான்.