Saturday, October 6, 2007

ஜோதிடம்‍‍‍- என் கேள்வியும் வந்த பதிலும்

செல்லா அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னூட்டதிற்கு Dr.Bruno அவர்கள் தன் பதிவில் பதிலளித்திருக்கிறார்.அது எனக்கு ஒரு தெளிவை தராததால் மீண்டும் விளக்கம் கோருகிறேன்.

என் கேள்வி:

Greenwich Mean Time- பல முறை மாற்றி அமைக்கப்பட்டது.இலங்கையின் நேரம் கூட சிறிது நாட்களுக்கு முன் மாற்றி அமைக்கப்பட்டது.இது போன்ற சமயங்களில் எல்லா ஜாதகங்களும் மாற்றி எழுதப்படுமா?

http://osaichella.blogspot.com/2007/10/blog-post_8682.html

வந்த பதில்:

Horoscope is written with reference to the Time of Sun Rise. So Change of GMT or the DST will not have any impact on the horoscope.

For example, if you are going in Pandian Express from Egmore to Madurai. If the train starts at 9 PM, and if you eat a biscuit after 30 mintues, then you have eaten the biscuit at 9:30

If the train starts at 8 PM and if you eat a biscuit after 30 minutes, then you have eaten the biscuit at 8:30

http://bruno.penandscale.com/2007/10/faq-on-astrology.html

எனக்கு இன்னும் புரியவில்லை...Time of sun rise ஐ எப்ப‌டி க‌ணிக்கிறார்க‌ள்? GMT அல்ல‌து local standard time ஐ வைத்துதானே? குழந்தை பிறக்கும் நேரத்தையும் நாம் இந்த முறையில்தான் குறிக்கிறோம்.திடிரென்று இதில் அரைமணி,ஒருமணி மாற்றிவைத்தால்,பழைய சூரிய உதய நேரத்தின்படி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட ஜாதகங்கள் அனைத்தும் மறுபடியும் மாற்றி எழுதப்படுமா என்பதுதான் நான் அறிய விரும்புவது.

Day light saving time concept உள்ளது என்கிறார் டாக்டர்.புரூனோ.. எல்லாம் ஒரு மாதிரி adjusட் பண்ணி ஒரு குத்து மதிப்பாக ஒரு நேர அளவுகோலை ஏற்படுத்துவது...அப்படிதானே டாக்டர்?

Biscuit உதார‌ண‌ம் ஒரு பிஸ்கோத்து...வேறு எதாவ‌து சொல்லியிருக்க‌லாம்.

16 comments:

வவ்வால் said...

உள்ளூரில் சூரிய உதய நேரம் என்பது மாறு படும் , தினமலரில் கூட இன்றைய சூரிய உதய நேரம் என குறிப்பிட்டு போட்டு இருப்பார்கள்.

ஆனாலும் ஜோதிட நூல்களில் அப்ப்டி சூரிய உதய காலத்தில் இருந்து தான் கணிக்க வேண்டும் என்று போட்டு இருந்தாலும் நடைமுறையில் யாரும் அதன் அடிப்படையில் தங்கள் கடிகாரத்தில் நேரம் அமைப்பதில்லை என்பதை கவனத்தில் கொண்டால், நீங்கள் சொன்னது போல GMT நேரத்தின் குளறுபடிகளின் தாக்கம் தான் ஜாதகத்தில் இருக்கும்.

உதாரணமாக மருத்துவமனையில் நள்ளிரவு 12.30 க்கு குழந்தை பிறந்தது என நேரம் குறிக்கும் போது நாம் கடிகாரம் பார்த்து தான் நேரம் குறிக்கிறோம்.

ஜோதிடம் என்பது விஞ்ஞானம் அல்ல, அதிலும் எத்தனை பேர் பழைய நூல்களின் அறிவைப்பெற்று இருப்பார்கள் என்பது தெரியாது. அப்படி இருக்கும் போது எல்லாமே ஒரு குத்து மதிப்பான கணிப்புகள் தான்!

கிரகங்களின் தாக்கம் மனிதன் மீது இருக்கிறது என விஞ்ஞானத்தை துணைக்கு அழைப்பார்கள், ஆனால் ராகு, கேது என்று எங்கே கிரகம் இருக்கிறது. மேலும் சந்திரன், சூரியன் எல்லாமே கிரகம் என்ற கணக்கில் தான் ஜாதகம் செயல் படுகிறது.

செவ்வாய் இரவு 12.30 க்கு ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தை எந்த தினத்தில் பிறந்ததாக கணக்கு வைப்பார்கள்!

காலண்டர், நேரம் அடிப்படையில் அது புதன் கிழமை ஆகிவிடும்.

இங்கு தான் அந்த சூரிய உதய நேரம் என்ற கணக்கு செயல் படும். ஜோதிடவியல் படி சூரியன் உதிக்கும் வரைக்கும் அது செவ்வாய் தான் சூரியன் உதித்த பிறகே புதன் என்ற நாள் கணக்கில் வரும்.

இப்படி நாளைக்கணக்கில் எடுக்க சூரிய உதயமும் , நேரத்தை கணக்கில் எடுக்க கடிகாரத்தையும் பார்ப்பதால் எல்லா ஜாதகமும் தவறாக தான் இது வரை கணிக்கப்பட்டு இருக்கும். அது தான் உண்மை! இந்த உண்மை புரியாமல் பலரும் ஜாதகம் பார்த்து பலன் கிடைக்கும் என நம்புகிறார்கள்.

எனக்கு தெரிந்ததை வைத்து ஜோதிடம் என்பது ஒரு கட்டுக்கதை என்பதை சொல்லி இருக்கிறேன். புரிந்தால் சரி!

சாலிசம்பர் said...

ராஜிவ்காந்தி,இந்திராகாந்தி படுகொலைகளை ஜோதிட நிபுணர்கள் நினைத்தால் தடுத்திருக்கலாம்.ஒரு நிபுணர் கூட அதை செய்யாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது.

காட்டு மிருகங்களை வேட்டையாடுவதை மாபெரும் வீரமாக கருதிய காலம் முன்னர் இருந்தது.இப்போது அது சட்டப்படி குற்றம்.

அதைப் போன்ற சட்டம் ஜோசியம் பார்ப்பதற்கும் தேவை.

ச.மனோகர் said...

'காட்டு மிருகங்களை வேட்டையாடுவதை மாபெரும் வீரமாக கருதிய காலம் முன்னர் இருந்தது.இப்போது அது சட்டப்படி குற்றம்.

அதைப் போன்ற சட்டம் ஜோசியம் பார்ப்பதற்கும் தேவை'

ஜாலி...ஜோசியத்தோடு ராசிக்கல்லு,நேமாலஜி, எண்கணிதம் போன்றவற்றையும் சேர்த்து அள்ளி குப்பையில் போடவேண்டும்.

ஜீவி said...

எனக்குத் தெரிந்த வரையில், ஜாதகக்
கணிப்பிற்கு முக்கியமாகத் தேவைப்படுவது, அன்றைய தின சூரிய உதய நேரம் தான். ஒரு குழந்தை எந்த வெளிநாட்டில் பிறந்தாலும், அந்த தேசத்திய சூரிய உதயம் தான். அதற்கேற்ப இந்திய நேரத்தைக் கணக்கிடுவது தவறு.
அதே மாதிரி, செவ்வாய்க்கிழமை 12:30 என்றால், புதன்கிழமை சூரிய உதயம் தான்.
நம்து சுப்பையா வாத்தியார் ஐயாவைக்
கேட்டால், சரிவரத் தெரியும்.

ச.மனோகர் said...

சரிதான்...விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு...

Doctor Bruno said...

//Time of sun rise ஐ எப்ப‌டி க‌ணிக்கிறார்க‌ள்? GMT அல்ல‌து local standard time ஐ வைத்துதானே? குழந்தை பிறக்கும் நேரத்தையும் நாம் இந்த முறையில்தான் குறிக்கிறோம்.திடிரென்று இதில் அரைமணி,ஒருமணி மாற்றிவைத்தால்,பழைய சூரிய உதய நேரத்தின்படி ஏற்கனவே எழுதிவைக்கப்பட்ட ஜாதகங்கள் அனைத்தும் மறுபடியும் மாற்றி எழுதப்படுமா என்பதுதான் நான் அறிய விரும்புவது.//

Answers given at http://bruno.penandscale.com/2007/10/should-horoscopes-need-to-be-changed.html

ச.மனோகர் said...

நண்பர்கள் யாராவது Dr.Bruno அவர்கள் பதிவுக்கு சென்று படித்துவிட்டு என்னைப் போன்ற சாதாரண மூளைக்கு புரியுமாறு விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Doctor Bruno said...

Disclaimer : my posts are meant for the person who want to understand astrology and has few doubts in that

The aim of my posting is not to prove anything.

//என்னைப் போன்ற சாதாரண மூளைக்கு புரியுமாறு விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//

என்ன புரியவில்லை என்று கேட்டால் அது குறித்து எனக்கு தெரியும் பட்சத்தில் விளக்க தயாராக இருக்கிறேன். (எனக்கு கொஞ்சம் தான் தெரியும்)

Other than that I am not trying to debate anything. you are free to believe in astrology or not believe in astrology.

I can only clarify doubts - Let me repeat that I am just a teacher and not a preacher. Don't confuse !!!!

ச.மனோகர் said...

'என்ன புரியவில்லை என்று கேட்டால் அது குறித்து எனக்கு தெரியும் பட்சத்தில் விளக்க தயாராக இருக்கிறேன். (எனக்கு கொஞ்சம் தான் தெரியும்)'

ம்...கொஞ்சம்தான் தெரியுமா?... சரி..ஒரே ஒரு சந்தேகத்திற்கு மட்டும் பதிலளிக்கவும்..

சூரிய உதய நேரத்தையும்,குழந்தை பிறக்கும் நேரத்தையும் குறிப்பிட GMT, localtime அல்லாது வேறு எதாவது முறையில் கணக்கிடுகிறார்களா?

'Let me repeat that I am just a teacher and not a preacher. Don't confuse !!!!'

நான் எங்க டாக்டர் குழ(ம்)ப்பினேன்?.. நான் எங்கோ கேட்ட கேள்விக்கு நீங்களாக பதிலளிக்க வந்தீர்கள்.

உங்களை teacher என்றோ preacher என்றோ நான் கருதவில்லை. ஜோதிடத்தை பரப்புபவர்களையும்,
ராசிக்கல் போன்ற முட்டாள்தனங்களை விற்பவர்களையும் சமூக நோய் கிருமிகளாக பார்ப்பவன் நான்.இப்படி நான் கருதுவதற்கு எனக்கு முழு உரிமை உள்ளது என்பதை தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இதில் மாற்று கருத்து கொள்ள உங்களுக்கும் முழு உரிமை உள்ளது.

Anonymous said...

//ஜோதிடத்தை பரப்புபவர்களையும்,
ராசிக்கல் போன்ற முட்டாள்தனங்களை விற்பவர்களையும் சமூக நோய் கிருமிகளாக பார்ப்பவன் நான்.//
That is your right

//இப்படி நான் கருதுவதற்கு எனக்கு முழு உரிமை உள்ளது என்பதை தாங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.இதில் மாற்று கருத்து கொள்ள உங்களுக்கும் முழு உரிமை உள்ளது.//
Yes.. I agree

But my point is very simple

ஜோதிடத்தை பரப்புபவர்களையும், ஜோதிடம் குறித்து விளக்கம் அளிப்பவர்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் .... Other than that, what I meant was quite simple. If you have any "doubts regarding calculations associated with casting a horoscope" I am ready to explain

On the other hand, "if you doubt astrology" you can still continue to doubt that and my explanations (with regard to the maths involved) is not for your "doubt in astrology"

ச.மனோகர் said...

'ஜோதிடத்தை பரப்புபவர்களையும், ஜோதிடம் குறித்து விளக்கம் அளிப்பவர்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும்'

என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது? இதற்கு பண்டிதர்கள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

"if you doubt astrology" you can still continue to doubt that and my explanations (with regard to the maths involved) is not for your "doubt in astrology"

சரி டாக்டர்..வேறு இடத்தில் என் சந்தேகங்களை கேட்டுக்கொள்கிறேன்.


மத நம்பிக்கைகளும்,ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளும் கேள்வி கேட்காமல் நம்பத்தான் சொல்லுகின்றன. அதற்கு நாம் தயாரில்லை.

Anonymous said...

//மத நம்பிக்கைகளும்,ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளும் கேள்வி கேட்காமல் நம்பத்தான் சொல்லுகின்றன. அதற்கு நாம் தயாரில்லை.//

Misinterpretation again.... You can ask questions and get answers reagrding the Calculations (casting the horoscope)... Belief has no part to play in the mathematics involved

//ஒரே ஒரு சந்தேகத்திற்கு மட்டும் பதிலளிக்கவும்..//

Please tell whether your initial doubts have been cleared .....

You had asked some questions regarding the mathematics involved. I had given a reply in detail. you had again told that you cannot understand. I further elaborated.

Can you please tell me whether your doubt regarding GMT is resolved or not

(Please note that this is in no way related to YOUR BELIEF about the validity of astrology.)

ச.மனோகர் said...

ஒருவாறு புரிந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன் டாக்டர்.. கடிகாரத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றி வைத்துக்கொள்..சூரிய உதயத்தை standard scale-ஆக வைத்து அப்போதைய கிரக நிலைகளை நிலைகளை பார்த்து எழுதப்படுவதுதான் ஜாதகம் என்கிறீர்கள்..சரிதானே..

இது சரி என்று நீங்கள் கருதினால் இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்..

'சூரிய உதய நேரத்தையும்,குழந்தை பிறக்கும் நேரத்தையும் குறிப்பிட GMT, localtime அல்லாது வேறு எதாவது முறையில் குறிப்பிடுகிறார்களா?'

மறுபடி மறுபடி இப்படி கேட்பதற்கு காரணம்..என் நட்பு வட்டாரத்தில் இது சம்பந்தமாக ஒரு விவாதம் போய்க்கொண்டிருக்கிறது.அதற்காக இந்த பதில் தேவைப்படுகிறது.

'Misinterpretation again.... You can ask questions and get answers reagrding the Calculations (casting the horoscope)... Belief has no part to play in the mathematics involved'

புரிகிறது டாக்டர்..Darwin-வினின் theory of evolution கிருத்துவ மத நிறுவனங்கள் நடத்தும் கல்லூரிகளிலும் சொல்லித்தருவது போல..சோதிட நம்பிக்கை சம்பந்தமான தங்களின் நிலைப்பாட்டை புரிந்து கொண்டேன். சோதிட நம்பிக்கை சார்ந்த என் கருத்துகள் தங்களுக்கான பதிலில் வராது.

Anonymous said...

//சூரிய உதயத்தை standard scale-ஆக வைத்து அப்போதைய கிரக நிலைகளை நிலைகளை பார்த்து எழுதப்படுவதுதான் ஜாதகம் என்கிறீர்கள்..சரிதானே.. //

The position of the planets (this includes Sun, Moon, Nodes) at the Time of Sun Rise is given in the
பஞ்சாங்கம்.... The rate of movement of the "planets" is also given. From this, we have to calculate the position of the planets "at the time of birth" in relation to the place of birth.

This is just mathematics.

So the horoscope does not give the position of planet at the time of sun rise. Instead what is written is the position of planets at the

//'சூரிய உதய நேரத்தையும்,குழந்தை பிறக்கும் நேரத்தையும் குறிப்பிட GMT, localtime அல்லாது வேறு எதாவது முறையில் குறிப்பிடுகிறார்களா?'//

Sideral Time, நாழிகை போன்ற கணக்குகளும் உண்டு

ச.மனோகர் said...

அப்படியே இவற்றிக்கும் ஒரு பதிலை தட்டிவிடுங்கள்...இணையத்தில் படித்தது..

1) சோதிட சாத்திரம் நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபடுகின்றன.

2) வெப்ப மண்டல சோதிடம் நெப்தியூன், யுறேனஸ் மற்றும் புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுக்கிறது. ஆனால் இராகு கேது கோள்களையும் 27 நட்சத்திரங்களையும் கணக்கில் எடுப்பதில்லை.

3) இந்திய சோதிடம் நெப்தியூன், யுறேனஸ், புளுட்டோ கோள்களைக் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால் இராகு கேது என்ற கற்பனைக் கோள்களைக் கணக்கில் எடுக்கிறது.

4) சோதிடம் ஞாயிறு குடும்பத்தின் மையம் புவி என்று சொல்வது பெரிய மடமை. அதன் மையம் ஞாயிறு என்பது இன்று அறிவியல் பால பாடம்.

5) சோதிடம் ஞாயிறு போன்ற விண்மீனையும் நிலா போன்ற துணைக் கோளையும் கோள்களாகவே கொள்கிறது.

இதெல்லாம் உண்மையா?

Anonymous said...

We should note that the "planets" mentioned in Vedic Astrology include the following "celestial bodies"
1. Sun
2. Moon
3. Planets
4. Nodes

The definition of "கோள்/planet" as of today is not the கிரகம் in vedic astrology

//ஆனால் இராகு கேது என்ற கற்பனைக் கோள்களைக் கணக்கில் எடுக்கிறது.//
Though they are "imaginary" planets, the points denoted by Rahu (and Kethu which is 180 degree away from that) is nothing but a direct function of the axes of earth and moon ....

Other than that, I will add your questions to the list of questions I have asked in my post

http://bruno.penandscale.com/2007/10/faq-on-astrology.html