புகார் காளைகளே வந்து தர வேண்டுமாமா? காளைகள் வதைபடுகிறதா இல்லையா என்பதை பார்த்தாலே தெரியாதாமா? முதலில் இந்த விளையாட்டில் கலந்து கொள்ள விருப்பம் இருக்கிறதா என்று காளைகளிடம் கேட்கப்பட்டதா எனவும் தெரியவில்லை.
முப்பது பேர் சேர்ந்துகொண்டு,குச்சியில் குத்தி,வாலைப்பிடித்து இழுத்து ஒரு காளையை அடக்குவது நம் வீர விளையாட்டாமா?
ஆயிரம் ஆண்டுகள் செய்து வந்தாலும் தவறான செயல்கள் தவறான செயல்கள்தான். இனியாவது மனிதனுக்கும்,மிருகங்களுக்கும் ஆபத்தான இந்த விளையாட்டை தடை செய்தே ஆகவேண்டும்.
3 comments:
ஆமாம்.கண்டிப்பாக.
ஒரு ஐந்தறிவு ஜீவனை வதைப்படுத்தி அடக்குவதில் தான் ஆறறிவு மனிதனின் வீரமும் ஆற்றலும் அடங்கியிருக்கிறதா?
இப்போட்டிக்குத் தயார்படுத்தும் போதும்,போட்டியின் ஆரம்ப கட்டங்களிலும் அக்காளைக்கு சாராயம் புகட்டப்படுவதும்,கண்களில் மஞ்சள்தூள் விசிறப்படுவதும்,வால்முறுக்கப்படுவதுமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.நேரில் பார்த்ததில்லை...
ஆனால் இங்குள்ள புகைப்படங்களையும்,வேறு சில புகைப்படங்களையும் பார்க்கும்போது உண்மைதானென உணர முடிகிறது.
எதற்காக இப்பந்தயங்கள்?
இன்னொரு பக்கம் காலில் கத்தி கட்டப்பட்ட சேவல்சண்டை...
இரண்டுமே தடை செய்யப்பட வேண்டியவை.
உங்களை பாராட்டுகிறேன் , தமிழ் நாட்டில் பசுமாட்டை பற்றி கவலைப்பட நிறைய பேர் இருக்கும்போது அதனுடைய கணவன்மார்களை பற்றியும் எழுத ஆட்கள் உள்ளார்கள் என்று நிரூபித்தமைக்கு.
காளை மாட்டை வைத்தும் காமெடியா? நடத்துங்க!
Post a Comment