நேற்று பூந்தமல்லி நெடுஞ்சாலையில் என் இருச்சக்கர வாகனத்தில் போய்க் கொண்டிருந்தேன். பச்சையப்பன் கல்லூரி தாண்டி ஹாரிங்டன் சாலையில் திரும்பினேன்.அப்போது என்னை உரசுவது போல் இரு சக்கர வாகனத்தில் கடும் வேகத்தில் ஒருவன் கடந்தான்.கடந்த சில அடிகளிலேயே இடது புறம் திரும்பி பான்பராக் எச்சிலை காற்றில் துப்பினான். அவ்வளவுதான்.. என் இடது கை, கால், ஹெல்மட்...என் அருகில் குழந்தையை வைத்துக்கொண்டு பயணம் செய்த தம்பதி.. எல்லோர் மீதும் எச்சில் தூறல்."ஏய்.." என்று கத்ததான் முடிந்தது.நொடியில் வாகன நெரிசலில் மறைந்தான்.
இவனையெல்லாம் அங்கேயே சட்டையை பிடித்து நாலு அறை அறைந்தால் தப்பா?
இந்த அதீத எச்சில் துப்பும் பழக்கம்..அதுவும் ஓடும் வாகனத்திலிருந்து எச்சில் துப்பும் பழக்கம் சென்னைக்கே உரித்தான ஒன்றா..இல்லை மற்ற நகரங்களிலும் இருக்கிறதா?
19 comments:
yuck(-:
///இவனையெல்லாம் அங்கேயே சட்டையை பிடித்து நாலு அறை அறைந்தால் தப்பா?///
இல்லைங்கோ,….
அடுத்த முறை, சிரமம் பாக்காம, பின் தொடர்ந்து, என்கள் சார்பாக ஒரு அறை விடவும் ;)
நிச்சயம் அடிக்கலாம்...
நம்மில் யார் ஒருவன் இதுவரை ரோட்டில்(பொது இடங்களில்) குப்பை போட வில்லையோ, எச்சில் துப்பவில்லையோ அல்லது ஒன்னுக்குப் போகவில்லையோ அவர்கள் இவனை அடிக்கலாம். :-))
பைக்கில் போகும்போது மட்டும்தான் துப்பக்கூடாதா? தினம் தினம் ரோட்டில் எறியப்படும் குப்பைகள், துப்பப்படும் எச்சில்கள், அடிக்கப்படும் சிறுநீர்கள் எல்லாம் கணக்கில்லையா?
இது ஒட்டு மொத்த சமூகத்தின் ஒழுங்கீனம். நீங்கள் பார்த்தது ஒரு அடையாளம்தான். :-((
**
லாரி ஓட்டும் ட்ரைவர் அப்படியே குனிந்து புளிச்சென்று துப்பியபோது அவருக்கு தெரியவில்லை அவர் துப்பியது ஒருவரின் தலையில் என்று. சண்டைக்கு கேட்கவா வேணும். இத்தனைக்கும் துப்பியவர் அய்யப்ப சாமிக்கு சீருடையுடன் விரதம் இருந்தவர்... :-))
**
இதெல்லாம் ஸ்கூல்ல இருந்து சொல்லிக்கொடுத்தாத்தான் வரும்.....
அடித்தால் மட்டும் போதாது. நடு ரோட்டில் ஒரு நாள் முழுதும் கட்டி போட வேண்டும்.
பலூன் மாமா...
நீங்கள் சொல்வது போல் இது ஒரு ஒட்டு மொத்த சமூக ஒழுங்கீனம்தான். நாம்தான் ஒருவரையொருவர் திட்டி, கண்டித்துக் கொள்ளவேண்டியதுதான். ஓடும் வாகனத்திலிருந்து எச்சில் துப்பாதே என்பது ஒரு குறைந்தபட்ச
எதிர்பார்ப்புதான்.இதைக் கூட செய்யமாட்டேன் என்பவர்களை என்ன செய்வது?
கருத்துக் கூறிய துளசி மேடம், மருதமூரான்,சர்வேசன்,பலூன் ஆகியோருக்கு நன்றி.
அடிக்கலாம் தான், ஆனால் கோபத்தில் அந்நியன் ரேஞ்சுக்கு கொலை எல்லாம் செய்ய கூடாது - நாகூர் இஸ்மாயில்
//ஓடும் வாகனத்திலிருந்து எச்சில் துப்பாதே என்பது ஒரு குறைந்தபட்ச
எதிர்பார்ப்புதான்.இதைக் கூட செய்யமாட்டேன் என்பவர்களை என்ன செய்வது?
//
பாபு மனோகர்,
உங்களின் எதிர்பார்ப்பு கோவம் எல்லாம் நியாயமானதுதான். ஆனால் இது நடக்காது. :-((
ஓடும் இரயில், பஸ் ..இப்படி எல்லாவற்றில் இருந்தும் துப்பல்,குப்பை ...வந்து விழுந்து கொண்டுதான் இருக்கிறது.
நம்மளவில் ஒழுங்காக இருக்கலாம். அடுத்தவன் தவறு செய்யும்போது ஒன்று செய்ய இயலாது. ஏன் என்றால் அவர்கள் செய்வது தவறு என்றே தெரியாதபோது திருந்துவது என்பது நடக்கவே நடக்காது.
***
எத்தனை குழந்தைகளுக்கு வீட்டில் குப்பை,பொது இடம், வரிசையில் நிற்பது சொல்லித்தரபடுகிறது.
அப்படியே அவர்கள் அதைக் கடைபிடிக்க முயற்சித்தாலும் 99.99 % மக்கள் வரிசையில் நிற்காதபோது இவனும் கற்றதை விட்டிவிட்டு வாழ்வதற்குப் பழகிவிடுவான்.
விதிகள் இருக்கலாம்
ஆனால் ஆடும் மைதானத்தில் அது எல்லோராலும் கடைபிடிக்கப்படவேண்டும்.
**
இயலாமையில் ஒன்றும் செய்ய முடியாமல் இப்படியே நாமும் போய்ச்சேர வேண்டியதுதான்.
**
சின்னச் சின்ன முயற்சிகள் செய்யலாம். ஆனால் அது நமது திருப்திக்காகத்தான்.
இஸ்மாயில்... அன்னியன் மாதிரி செய்யமுடியாமல்தான் வலைப்பூவில் வந்து ஆத்திரத்தை தீர்த்துக்கொள்வது.
வருகைக்கு நன்றி அனானி, இஸ்மாயில் இரண்டாம் சொக்கன்.
Just pay back his own coin.
வாசகர் கடிதம் ஒன்றில் படித்ததாக நினைவு. ஒரு பயணி இதுபோல எதுபற்றியும் கவலைப்படாது ஜன்னல் வழியே காறித்துப்ப, துப்பப்பட்ட நபர் பேரூந்தை நிறுத்தி, நிதானமாக துப்பின நபர் முகத்தில் காறித்துப்பிவிட்டு இறங்கிப்போனாராம்.
இப்படி அவரவர் காசுகளை அவரவருக்கே திருப்பித்தரும்போதுதான் உணர்வார்கள்.
சென்னையிலிருந்தபோது, ரங்கநாதன் தெருவில், காலை ஏழெட்டு மணி வாக்கில் கடைக்காரர்கள், குறிப்பாக காய்கறி விற்பவர்கள் அழுகின பொருட்கள் மற்றும் குப்பைகளை மனசாட்சியே இல்லாமல் நடு ரோட்டில் கொட்டிவிட்டுப்போவார்கள். அவர்களை தரதரவென்று இழுத்துவந்து நடுரோட்டில் உட்காரவைத்து அவர்கள் கொட்டின குப்பையை அவர்கள் தலையிலேயே கொட்டவேண்டும் என்று ஆத்திரம் எழுவதுண்டு.
அன்புடன்
முத்துக்குமார்
தப்பே இல்லங்க. ஆனா, அதுக்கு முன்னாடி நாம சரியா இருக்கோமான்னு நம்மை நாமே கேட்டுக்கணும். நாம சரியா இருக்கோம் அப்படின்னா தாராளமா அடிக்கலாம்.
கவிதைகளுடன்,
சகாரா.
சகாரா...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Matra nagarangalil Alla, Namnaadu muzukka irukkirathu. Matra developing countriesil irukkirathu, anal raodil mattum thuppuvargal. Naam mattum than aduthavanai patri kavalaipadamal avan thalayil thuppuvom. Adarkku nammake CUP.
"தப்பே இல்லங்க. ஆனா, அதுக்கு முன்னாடி நாம சரியா இருக்கோமான்னு நம்மை நாமே கேட்டுக்கணும். நாம சரியா இருக்கோம் அப்படின்னா தாராளமா அடிக்கலாம்.
கவிதைகளுடன்,
சகாரா"
உங்க புத்தி தெளிவாக இருக்கா என கண்ணாடிக்கு முன்னால் நின்று பல தடவை கேட்டுப்பாருங்க
Those with no sin cast they first stone என்று முத்துக்கள் உதிர்ப்போர்களுக்கு :
நீங்கள் சாலையில் செல்லும்போது இதேபோல ஒருவன் உங்கள் முகத்தில் துப்பிவிட்டுச்சென்றால் அப்போதும் இதே கேள்வியை உங்கள் மனசாட்சியை கேட்டு, பிறகு நிதானமாய் முகத்தைத்துடைத்துவிட்டு அமைதியாய் புன்னகையோடு மேற்செல்ல என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்
முத்துக்குமார்
//உங்க புத்தி தெளிவாக இருக்கா என கண்ணாடிக்கு முன்னால் நின்று பல தடவை கேட்டுப்பாருங்க//
பல தடவை கேக்க வேண்டிய அவசியம் இல்லீங்க.
என் மனசாட்சிய ஒரே ஒரு தடவ கேட்டுப் பார்த்தேன் 'நீ சரியா தான் இருக்கே. உன் புத்தி தெளிவாதான் இருக்கு' அப்படின்னு என் மனசாட்சி சொல்லிச்சு.
- சகாரா.
privet vse super
:)
Post a Comment