ரயில் மறியல் செய்வது, தண்டவாளத்தில் அமருவது என பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், கடும் நடவடிக்கை எடுப்போம் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் கடந்த சில வாரங்களாக ரயில் பயணிகள் சொல்லொணா துயரத்தை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை சென்டிரல், அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் பெரும் அவஸ்தையை சந்தித்து வருகிறார்கள்.குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில்கள் வருவதில்லை. ரயில்களின் நேரத்தை, அதிகாரிகள் திடீர் திடீரென மாற்றியமைத்து வருகின்றனர்.
இதனால் ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் இதுவரை நான்கு முறை போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டனர்.
"பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல வழிகள் உள்ளன. யாருக்கும் ரயிலை நிறுத்த உரிமை இல்லை. இனிமேல் இதுபோன்ற போராட்டங்களை அனுமதிக்க முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் வேலு.
எல்லாம் சரி…ஆனால் மக்களுக்கு ஒரு சட்டம், அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டமா?
எத்தனை முறை அரசியல் கட்சிகள் ரயில் மறியல்,சாலை மறியல் போராட்டங்கள் செய்திருக்கின்றன?
அதுவும் மரத்தை வெட்டி சாலைமறியல் செய்யப்பட்ட விசயம் அமைச்சர் வேலுவுக்கே நன்றாக தெரியும்.
ஏன் அப்போது அதை அவர் கண்டிக்கவில்லை? இப்போது ஏன் இவ்வளவு கண்டிப்பான அறிவிப்பு?
அரசியல்வாதிகளின் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டவை… நேரடியான மக்கள் போராட்டம் கட்டுப்படுத்தமுடியாதவை என்பதை அரசியல்வாதிகளும்,அரசியல் கட்சிகளும் நன்றாகவே அறியப்பட்டிருப்பதைதான் இது காட்டுகிறது.
4 comments:
//"பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல வழிகள் உள்ளன. யாருக்கும் ரயிலை நிறுத்த உரிமை இல்லை. இனிமேல் இதுபோன்ற போராட்டங்களை அனுமதிக்க முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"//
ஆமா. யாராவது ஒருத்தரு வந்து மனு கொடுங்க. பொழுது போகலைன்னா அதை பத்தி யோசிக்கறோம்.
முதல் தடவை போராட்டத்தில ஈடுபட்டப்பவே இதைப் பத்தி யோசிச்சு ஒரு நல்ல முடிவு எடுத்திருந்தா இத்தனை தடவை அவங்க மறியல் செஞ்சிருக்க வேண்டிய அவசியமில்லை.
ஏன்னா அவங்களுக்கு தலையெழுத்து பாருங்க வெய்யில்ல லாஸ் ஆஃப் பேல வந்து உக்காந்து மறியல் செய்யணும்னு.
சரியா சொன்னீர்கள்.
நந்தா..
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
எத்தனை முறை அரசியல் கட்சிகள் ரயில் மறியல்,சாலை மறியல் போராட்டங்கள் செய்திருக்கின்றன?
மனோகர் மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள். கிட்டத்தட்ட ஒரு மாதமாகவே பிரச்சினை உள்ள நிலையில். பா.ம.க. அமைச்சர் வேலு என்ன வேடிக்கையா பார்த்துக் கொண்டிருந்தார். மக்களின் அவதியை தீர்ப்பதற்கு வழியில்லாத அமைச்சரின் பேச்சு கடும் கண்டனத்திற்கு உரியது. வேலுவை ஒரே ஒரு நாளைக்கு திருவள்ளுரில் இருந்து புறநகர் இரயிலில் பயணம் செய்யச் சொன்னால் அப்பத்தான் புரிய வரும்....
அப்படியே இந்த லிங்கையும் கொஞ்சம் பாருங்க...
http://santhipu.blogspot.com/2007/08/blog-post.html
சந்திப்பு...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment